Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பனீர் மயோனிஸ் ராப்

பனீர் மயோனிஸ் தயாரிக்க

தேவையான பொருட்கள் :

பனீர் 100 கிராம்

பூண்டு 4 முதல் 5 பல்

ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் ¼ டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை

பனீரை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

மிக்ஸியில் பனீர், பூண்டு, உப்பு, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். அரைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக ஆயில் சேர்த்து கிரீமி பதத்திற்கு அரைக்கவும்.

மயோனிஸ் போன்ற மென்மையான பதம் வந்தவுடன் எடுத்து வைக்கவும்.

பனீர் மயோனிஸ் ராப்

தேவையான பொருட்கள்

கோதுமை சப்பாத்தி 2

பனீர் மயோனிஸ் 4 டேபிள்ஸ்பூன்

வெள்ளரிக்காய் ½ கப்

கேரட் ½ கப்

குடைமிளகாய் ½ கப்

லெட்யூஸ் அல்லது முட்டைகோஸ் ½ கப்

செய்முறை:

சப்பாத்தியின் மீது பனீர் மயோனிஸை தடவவும். காய்கறிகளை ஒன்றன் மீது ஒன்று வைத்து ரோல் செய்யவும். (விருப்பமிருந்தால் 2 நிமிடம் தவாவில் லேசாக சூடாக்கி பரிமாறலாம்.) சுவையான பனீர் மயோனிஸ் ராப் தயார்.

மருத்துவ பயன்கள் :

பனீர்

உயர்தர புரதச்சத்து கொண்டது.

தசை வளர்ச்சிக்கும், உடல் மீட்சிக்கும் உதவும்.

கால்சியம் நிறைந்ததால் எலும்புகளை வலுப்படுத்தும்.

பூண்டு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது.

ஆலிவ் ஆயில்

நல்ல கொழுப்பு (Healthy Fat) வழங்கும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

எடை குறைப்பவர்களுக்கு:

இந்த பனீர் மயோனிஸ், முட்டை மற்றும் சாதாரண மயோனிஸை விட புரதச்சத்து அதிகம் கொண்டது. காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும்.

100 கிராம் பனீர் மயோனிஸ் (சுமார்):

கலோரி: 250/300

புரதம்: 15/18 கிராம்

கொழுப்பு: 18/22 கிராம்

கார்போஹைட்ரேட்: 35 கிராம்

- ஹேமலதா வாசுதேவன்.