Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆரஞ்சு ரசம்

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

புளி - ஒரு சிறிய துண்டு

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

பெருங்காயம் - 2 சிட்டிகை

கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/4 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

கடுகு - 1/4 ஸ்பூன்

வறுத்து அரைக்க:

நெய் - 1 ஸ்பூன்

தனியா - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு -1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

மிளகு - 1/2 ஸ்பூன்

சீரகம் 1/2 ஸ்பூன்

செய்முறை:

*முதலில் புளியை ஊறவைத்து, 1 தண்ணீர் சேர்த்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து துவரம்பருப்பை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

*ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அதில் மல்லி விதைகள், துவரம் பருப்பு. கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, சீரகத்தைச் சேர்க்கவும்.

*இதை ஆற வைத்து மென்மையான பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.

*மிளகு மற்றும் சீரகத்தை ஒரு உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

*ஒரு கடாயில் புளிக்கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

*இதன் பச்சை வாசனை போகும் வரை, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.

*அரைத்து வைத்துள்ள புதிய ரசப் பொடியில் உங்களுக்கு தேவையான அளவு பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.

*இப்போது வேகவைத்த துவரம் பருப்புடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக மசித்துக் கொள்ளவும்.

*பின்னர் கொதிக்கும் ரசத்தில் சிறிது கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

*புளிக்கரைசல் கலவையுடன், பருப்பு கரைத்த தண்ணீர் மற்றும் ஆரஞ்சுச் சாற்றைச் சேர்க்கவும்.

அதனுடன் இடித்த மிளகு சீரகத்தைச் சேர்க்கவும்.

*மிதமான தீயில் ரசம் கொதித்து வரும் நுரை வரும் வரை கொதிக்க விடவும்.

*அதேநேரத்தில் ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும்.

*கடுகு வெடிக்கத் தொடங்கியதும், அதை ரசத்தின் மேல் ஊற்றவும். ரசம் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.

*இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆரஞ்சு ரசம் ரெடி!