தேவையானவை:
*புழுங்கல் அரிசி - 1 கிலோ
*வெங்காயம் - ¼ கிலோ
*மிளகாய் வற்றல் - 10
*பொரிகடலை மாவு - ¼ கிலோ
*டால்டா - 25 கிராம்
*உப்பு
*சோம்பு
*எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டு, அதனுடன் மிளகாய் வற்றல், சோம்பு, உப்பு, உரித்த வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவைப் போட்டு டால்டாவை சூடேற்றி அந்த மாவில் கலந்து விடவும். பிறகு பொட்டுக்கடலை மாவையும் கலந்து நன்றாக பிசைந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு குழலில் மாவைப் போட்டு பிழிந்து பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். இந்த வெங்காய முறுக்கு சாப்பிட சுவையாய் இருக்கும். 15 நாள் ஆனாலும் கெடாது.



