உளுந்து சாதம்
தேவையானவை:
Advertisement
முழு வெள்ளை உளுந்து - 1 கப்,
வரமிளகாய் - 3,
மிளகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இதழ்கள்,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் உளுந்தினை போட்டு வறுக்கவும். உளுந்து பாதி வறுபட்டதும் வரமிளகாய், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுபட்டதும், மிக்ஸியில் நைஸாக அரைத்து உப்பு, ெபருங்காயம் சேர்த்துக் கலந்து ஆறவிடவும். ஆறியதும் ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு மூடிவைக்கவும்.சாதத்தினை உதிர் உதிராக தயார் செய்யவும். வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் விட்டு கடுகு, வேர்க்கடலை தாளித்து தேவையான அளவு உளுந்து சாத ப்ரிமிக்ஸ் பவுடர் போட்டு ஒரு முறை புரட்டி இறக்கி சாதத்தில் போட்டு கலந்தால் உளுந்து சாதம் தயார்.
Advertisement