Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நுங்கு பாயசம்

தேவையான பொருட்கள்

நுங்கு - 15

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 300 கிராம்

பாதாம் பிசின் - 3 துண்டு

ஏலக்காய் - 5.

செய்முறை

பாயசம் செய்வதற்கு முந்தைய நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் நன்கு உப்பி, ஜெல் பதத்திற்கு வரும் வரை ஊற வைப்பது அவசியம். பாயசம் செய்ய எடுத்துக்கொண்ட நுங்கினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர் இதில் 3 நுங்கினை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும். மீதமுள்ள நுங்கினை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். சேர்க்காமல் மைபோல அரைக்கவும். இப்போது பாயசம் செய்ய, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூடேற்றவும். பால் கொதிவரும் நிலையில் இதில் அரைத்து வைத்த நுங்கினை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். பின்னர் இதனுடன் 5 ஏலக்காயை தட்டி சேர்த்துக்கொள்ளவும். ஏலக்காயை சேர்த்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டர் பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும். இப்போது, இதனுடன் இனிப்புக்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து, இதனுடன் நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளையும் சேர்த்து கலந்து விட வேண்டும். நுங்கு தண்ணீர் தனியே எடுத்து வைத்திருப்பின் அதை இதனுடன் சேர்த்து முதல் கொதி வரும் வரை காத்திருக்கவும். முதல் கொதி வந்தவுடன் பாத்திரத்தை இறக்கிவிட சுவையான நுங்கு பாயசம் ரெடி. தேவைப்பட்டால், முந்திரி மற்றும் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் இருந்து இறக்கிய பாயசத்தை ஆற விட்டு, ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும். 30 நிமிடம் கழித்து இந்த பாயசத்தை ஒரு கோப்பையில் ஊற்றி பரிமாறினால் நுங்கு பாயசம் தயார்.