Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நுங்கு பாயா

தேவையான பொருட்கள்:

நுங்கு-1 கப்.

பட்டை-1

ஏலக்காய்-1

லவங்கம்-1

முந்திரி-10

சோம்பு-1 தேக்கரண்டி.

கசகசா-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2.

பொட்டுக்கடலை-1 தேக்கரண்டி.

தேங்காய்-2 கைப்பிடி.

பட்டை-1

லவங்கம்-1

ஏலக்காய்-2

வெங்காயம்-1

தக்காளி-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பட்டை 1, ஏலக்காய் 1, லவங்கம் 1 சேர்த்து அதில் 1 கப் நுங்கை சேர்த்து 30 நிமிடம் வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்போது மிக்ஸியில் முந்திரி 10, சோம்பு 1 தேக்கரண்டி, கசகசா 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, பொட்டுக்கடலை 1 தேக்கரண்டி, 2 கைப்பிடி தேங்காய் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இப்போது பேனில் எண்ணெய் விட்டு பட்டை 1, ஏலக்காய் 2, லவங்கம் 1 சேர்த்து தாளித்துவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட்டை இதில் சேர்த்துக் கலந்துவிடவும்.இதில் வேகவைத்த நுங்கை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்துவிடவும். தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கினால் சுவையான நுங்கு பாயா தயார்.