தேவையான பொருட்கள்
பாசிப்பயறு 1 கப்
வெங்காயம் 2
இஞ்சி 1 சிறிய துண்டு
பூண்டு 5 பல்
பச்சை மிளகாய் 2
காய்ந்த மிளகாய் 2
சோம்பு ½ தேக்கரண்டி
சீரகம் ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலா ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
பாசிப்பயறை 45 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஊறிய பாசிப்பயறுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியான விழுதாக அரைக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
இந்தக் கலவையை இட்லித் தட்டில் அல்லது எண்ணெய் தடவிய தட்டில் சற்று தடிமனாக பரப்பி ஆவியில் 10-12 நிமிடங்கள் வேகவைக்கவும். ஆறியதும் சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெட்டிய பாசிப்பயறு துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இறுதியில் கரம் மசாலா மற்றும் சிறிது மிளகுத்தூள் தூவி நன்றாகப் புரட்டி இறக்கவும்.
குறிப்பு : விருப்பப்பட்டால் கடைசியாக சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்தால் நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
பாசிப்பயறு பயன்கள்
பாசிப்பயறு தாவரப் புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது.
ஃபோலேட், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
நார்ச்சத்து இருப்பதால் வயிறு நிறைவாக இருக்கும்.
குறைந்த எண்ணெயில் தயாரித்தால் தினசரி உணவில் சேர்க்கக்கூடிய சத்தான சைவ உணவாக இருக்கும்.
- ஹேமலதா வாசுதேவன்


