Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நவராத்திரி சிறப்பு நவ பிரசாதங்கள்!

வேர்க்கடலை அத்திப்பழ சுண்டல்

​தேவையான பொருட்கள்

பச்சை வேர்க்கடலை - 1 கப்,

உலர் அத்திப்பழம் - 3 (பொடியாக நறுக்கியது),

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

​செய்முறை

​வேர்க்கடலையைக் கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து, தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். வேகவைத்த வேர்க்கடலை மற்றும் நறுக்கிய அத்திப்பழம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். ​கடைசியாக துருவிய தேங்காய் தூவி இறக்கவும்.

பாசிப்பயறு பாதாம் சுண்டல் ​

​தேவையான பொருட்கள்

பச்சை பாசிப்பயறு - 1 கப்,

ஊறவைத்து தோல் உரித்து துருவிய/

சீவிய பாதாம் - 10,

கடுகு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நெய் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையானஅளவு.

​செய்முறை

​பாசிப்பயறை 3-4 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து மென்மையாக வேகவைத்து நீர் வடிக்கவும். நெய்யில் கடுகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். வேகவைத்த பாசிப்பயறு மற்றும் துருவிய பாதாம் சேர்த்து மென்மையாகக் கிளறி 1 நிமிடம் கழித்து இறக்கவும்.

கொண்டைக்கடலை மாதுளை சுண்டல்

​தேவையான பொருட்கள்

கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்

மாதுளை முத்துக்கள் - 1/2 கப்

வறுத்து அரைக்க (வரமிளகாய் - 2 தனியா - 1 டீஸ்பூன்)

கடுகு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

​செய்முறை

கொண்டைக்கடலை பயிறை இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும். வரமிளகாய் மற்றும் தனியாவை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து, வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் அரைத்த பொடி சேர்த்து வதக்கவும். ஆறியதும் மாதுளை முத்துக்களைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மொச்சை பனீர் சுண்டல் ​

​தேவையான பொருட்கள்

பச்சை மொச்சை அல்லது வெள்ளை மொச்சை - 1 கப்

சிறிய சதுரங்களாக நறுக்கிய பனீர் - 1/2 கப்

கடுகு - 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி துருவல் - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிட்டிகை

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

​செய்முறை

​மொச்சையை ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும். பனீர் துண்டுகளை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும். நெய்யில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து வேகவைத்த மொச்சை சேர்த்து வதக்கவும். இறுதியில் வறுத்த பனீர் சேர்த்து

மெதுவாகக் கலந்து இறக்கவும்.

ராஜ்மா எள் சுண்டல்

​தேவையான பொருட்கள்

ராஜ்மா - 1 கப்

வறுத்த வெள்ளை எள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

​செய்முறை

​ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து மென்மையாக வேகவைக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். வேகவைத்த ராஜ்மா சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இறக்குவதற்கு முன் வறுத்த எள் பொடியைத் தூவி கலந்து இறக்கவும்.

தட்டப்பயறு மாம்பழ சுண்டல்

​தேவையான பொருட்கள்

தட்டப்பயறு (காராமணி) - 1 கப், பொடியாக நறுக்கிய கெட்டி மாங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

காய்ந்தகாய் - 2

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

​செய்முறை

​தட்டப்பயறை வறுத்து, ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். வேகவைத்த தட்டப்பயறு சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்த பிறகு, நறுக்கிய மாங்காயைச் சேர்த்து கலந்து பரிமாறவும்.

கொள்ளு ஓட்ஸ் சுண்டல்

​தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்

ரோல்டு ஓட்ஸ் - 3

டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

​செய்முறை

​கொள்ளை இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து வடித்துக் கொள்ளவும். ஓட்ஸை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொள்ளு சேர்த்து கிளறவும். இறுதியில் வறுத்த ஓட்ஸ் தூவி நன்றாகக் கலந்து 1 நிமிடத்தில் இறக்கவும்.

நவதானிய மசாலா சுண்டல்

​தேவையான பொருட்கள்

வேகவைத்த (சுண்டல் கடலை, பட்டாணி, வேர்க்கடலை) கலவை - 1 கப்

சுண்டல் பொடி (தனியா, வரமிளகாய், கடலைப்பருப்பு வறுத்து பொடித்தது) - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

​செய்முறை

​தானியங்களை ஒன்றாக வேகவைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து வேகவைத்த தானியங்களைச் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள சுண்டல் பொடி மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி இறக்கவும்.

இனிப்பு மக்கானா (தாமரை விதை) சுண்டல்

தேவையான பொருட்கள்

மக்கானா (தாமரை விதை) - 2 கப் பொடித்த வெல்லம் - 1/2 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள்

வெள்ளை எள் - 1 டீஸ்பூன்.

​செய்முறை

​நெய்யில் மக்கானாவை மிதமான தீயில் மொறுமொறுப்பாகும் வரை வறுத்து தனியாக வைக்கவும். சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, பாகு பதம் (பிசுபிசுப்பு பதம்) வரும் வரை காய்ச்சவும். பாகில் ஏலக்காய் தூள், வறுத்த எள் மற்றும் மக்கானா சேர்த்து வெல்லம் மக்கானாவில் நன்றாக ஒட்டும் வரை கிளறி இறக்கவும்.