தேவையான பொருட்கள்
மட்டன் கீமா - 250 கிராம்
பிஞ்சு சுண்டைக்காய் - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
தனியா தூள் -1½ டீஸ்பூன்
சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
மிளகு தூள் - ½ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - ½ டீஸ்பூன்
முந்திரி - 45 (விருப்பப்பட்டால்).
செய்முறை
பிஞ்சு சுண்டைக்காயை நன்றாக கழுவி, காம்பை நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சுண்டைக்காயை 34 நிமிடங்கள் லேசாக வதக்கி தனியாக வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலாவை வதக்கவும்.
மட்டன் கீமாவை சேர்த்து நன்றாக கிளறவும். 5 முதல் 7 நிமிடங்கள் வதக்கவும். சுண்டைக்காயை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும். தேங்காய், சோம்பு மற்றும் முந்திரியை அரைத்து ஊற்றவும். உப்பு சரிபார்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். இறுதியாக கரம் மசாலா, மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான மட்டன் கீமா பிஞ்சு சுண்டைக்காய் கிரேவி தயார்.
மருத்துவ பயன்கள்
மட்டன் கீமா: நல்ல தரமான புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் B12 ஆகியவற்றை வழங்குகிறது.
பிஞ்சு சுண்டைக்காய்: நார்ச்சத்து மற்றும் பல்வேறு தாவரச் சத்துக்களைத் தருகின்றன.
- ஹேமலதா வாசுதேவன்

