Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடுகுப் பொடிக் குழம்பு

தேவையானவை:

நல்லெண்ணெய் - 1 குழம்புக் கரண்டி,

பூண்டு பற்கள் - 1 கப்,

கடுகு - 1 தேக்கரண்டி,

புளி - நெல்லிக்காய் அளவு,

குழம்பு மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,

கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கடுகை எண்ணெயின்றி வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும். பின் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி தோலுரித்த பூண்டை அதில் போட்டு நன்கு வதக்கவும். பின் குழம்புத்தூளை போட்டு கலந்து புளியையும், உப்பையும் கரைத்து வடிகட்டி ஊற்றவும். குழம்பு சுண்டியதும் கடுகுப்பொடி தூவி கிளறி இறக்கவும். இந்தக் குழம்பு குளிர்காலத்திற்கேற்ற குழம்பு. மூட்டுவலி, உடல் அசதி போக்கும். சாதத்திற்கும், இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிட ஏற்ற உணவு.