Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காளான் ஒயிட் பிரியாணி

தேவையான பொருட்கள்

200கிராம் பட்டன் காளான் கட் செய்தது

1/2கப் சின்ன வெங்காயம்

6 பச்சை மிளகாய் இரண்டாக கட் செய்தது

12 முந்திரி நைசாக அரைத்தது

2டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்

50 கிராம் கேரட் கட் செய்தது

100கிராம் உருளைக்கிழங்கு கட் செய்தது

1கைப்பிடியளவு புதினா, கொத்தமல்லித்தழை

தேவையானஅளவு உப்பு

60 மிலி எண்ணெய், நெய்

2 பட்டை

6 இலவங்கம்

6 ஏலக்காய்

1 அன்னாசிப்பூ

2 மராட்டிமொக்கு

2பிரியாணி இலை

1டீஸ்பூன் எலுமிச்சை சாறு

350 கிராம் சீரக சம்பா அரிசி அல்லது 1+1/2 டம்ளர்

1+1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை

முந்திரியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்களைப் போட்டு லேசாக வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.உப்பு சேர்த்து கட் செய்த காளான் மற்றும் கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின் மூடி 2 விசில் விட்டு இறக்கவும். இதில் முந்திரி விழுது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியைப் போட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 2டேபிள் ஸ்பூன் நெய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடி 1 விசில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும் இறக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.