Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காளான் தக்காளி பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

பெங்களூர் தக்காளி - 2,

பெரிய வெங்காயம் - 1,

நறுக்கிய காளான் - 200 கிராம்,

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

கொத்த மல்லித்தழை - சிறிது.

செய்முறை:

கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த தக்காளி, நறுக்கிய காளானைச் சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் 100-150 மி.லி. தண்ணீர் சேர்த்து காளானை வேக விட்டு, உப்பு சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்கவும். நறுக்கிய கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை யால் அலங்கரித்து பரிமாறவும்.