புதினா காரச் சட்னி
தேவையானவை:
புதினா - 2 கட்டு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி,
பூண்டு - 5 பல்,
நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 5,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
கறிவேப்பிலை - 1/2 கப்,
உப்பு - சுவைக்கு ஏற்ப,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய் - 1 ேமசைக்கரண்டி,
உளுந்து - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பினை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். இதனுடன் பூண்டு, இஞ்சி, புளி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு கறிவேப்பிலை, புதினா சேர்த்து நன்கு வதங்கியதும், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஆறியதும் தண்ணீர் சிறுகச் சிறுக சேர்த்து ெகட்டியாக அரைக்கவும். இதில் தாளிக்க ேவண்டியதை எண்ணெயில் தாளித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.