புதினா போளி
தேவையானவை:
Advertisement
புதினா - ஒரு கப் (பொடியாக நறுக்கியது),
கோதுமை மாவு - ½ கப்,
மைதா - ¾ கப்,
மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்,
மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் உப்புச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு ஸ்பூன் நெய் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மைதாக் கலவையை சிறிது எடுத்து சப்பாத்தியாக இட்டு அதில் புதினா பூரணத்தை வைத்துப் போளியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் போட்டு சுட்டு எடுக்கவும்.
Advertisement