தேவையானவை
தினை அரிசி - 1 கப்
கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி - 1 கப்
இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி
சீரகம், மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள், கறிமசால் பொடி - 1 தேக்கரண்டி
நெய், முந்திரி - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1.
செய்முறை: பீன்ஸ், கேரட், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு வெங்காயம், நறுக்கிய காய்களை வதக்கிக் கொள்ளவும். சீரகம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித்துருவல், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர், மிளகாய்த்தூள், கறிமசால் பொடி சேர்த்து வதக்கவும். அதனுடன் தினை அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கி, 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும்.
வெந்தவுடன் இறக்கி, அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து கிளறிவிடவும். சுவையான தினை வெஜிடபிள் ரைஸ் தயார்.


