Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மீல்மேக்கர் தோசை

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்

பூண்டு - 1 பல் (பொடியாக நறுக்கியது)

சீரகம் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

அரைப்பதற்கு

மீல் மேக்கர் - 1 கப்

இஞ்சி - சிறிய துண்டு

ரவை - 1/4 கப்

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு மிக்சர் ஜாரில் மீல் மேக்கர், 1 துண்டு இஞ்சி, ரவை 1/4 கப், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் கோதுமை மாவு, பூண்டு, சீரகம், கொத்தமல்லியை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ரவா தோசை போன்று அள்ளி ஊற்றி, எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான மீல்மேக்கர் தோசை தயார்.