Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீல் மேக்கர் வெள்ளை குருமா

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

தேங்காய் - 1/4 கப்

முந்திரி - 5-6

இஞ்சி - 1 இன்ச்

பச்சை மிளகாய் - 3-4

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 2

கசகசா - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 6-7

குருமாவிற்கு...

மீல் மேக்கர் - 1 கப் (சுடுநீரில் ஊற வைத்தது)

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

கல்பாசி - சிறு துண்டு

பிரியாணி இலை - 1

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

புதினா - சிறிது

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு மீல் மேக்கரை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு நீரையும், உப்பையும் சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மீல் மேக்கர் வெள்ளை குருமா தயார் !