Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

மாம்பழ லட்டு

தேவையான பொருட்கள்:

*நெய் - 1 டீஸ்பூன்

*துருவிய தேங்காய் - 1 கப்

*மாம்பழ கூழ் - 1/2 கப்

*குங்குமப்பூ - 1 சிட்டிகை

* ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

* பால் பவுடர் - 3 1/2 டேபிள் ஸ்பூன்

* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்

* பவுடர்டு சுகர் தேவையான அளவு (விருப்பமிருந்தால்)

* டெசிகேட்டட் தேங்காய் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போகும் அளவில் நன்கு வறுக்க வேண்டும்.

* அதன் பின் அதில் 1/2 கப் மாம்பழ கூழை சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

*பிறகு அதில் 3 1/2 டேபிள் ஸ்பூன் பால் பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி, அல்வா போன்று நன்கு திரண்டு வரும் வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

*பின்னர் கையில் நெய்யை தடவி, அந்த மாம்பழ கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

*இறுதியாக அந்த லட்டுக்களை டெசிகேட்டட் தேங்காயில் பிரட்டி எடுத்தால், சுவையான மாம்பழ லட்டு தயார்.