தேவையான பொருட்கள்:
அளவுக்கு அதிகமாக புளிப்பு இல்லாத மாங்காய் துருவல் -ஒரு கப்
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
பச்சை மிளகாய் , வர மிளகாய்தலா- 3
பூண்டுப்பல்- 5
சின்ன வெங்காயம்- ஆறு
கருவேப்பிலை- ஒரு ஆர்க்கு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு ,உளுத்தம் பருப்பு தாளிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
துருவல்கள், மிளகாய்கள், சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துவற்றை தாளித்து அரைத்து வைத்த சட்டினியுடன் சேர்த்து கிளறவும். புளிப்பு அதிகம் இல்லாததால் இட்லி ,தோசையிலிருந்து அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். புளிப்பு அதிகமான மாங்காயில் இப்படி செய்தால் ருசியாக இருக்கும். ஆனால் புளித்தமாவில் செய்யும் பதார்த்தங்களுடன் தொட்டுக்கொண்டால் மேலும் புளிப்பைக் கூட்டி அமில சுரப்பை உண்டு பண்ணும்.


