Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

மகிழம்பூ முறுக்கு

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1 கிலோ

புழுங்கல் அரிசி 1/4 கிலோ பொட்டுக்கடலை கால் - 1/4 கிலோ தேங்காய் – 1

செய்முறை:

தேங்காயில் கெட்டியான பாலை எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து மாவாக அரைக்கவும். புழுங்கல் அரிசியை வறுத்து மாவாக திரிக்கவும். பொட்டுக்கடலையையும் கல் நீக்கி மாவாக அரைத்து சலித்து எடுத்து மூன்று மாவையும் கலந்து வெண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து தேங்காய் பாலில் உப்பு சேர்த்து மாவில் கலந்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். முறுக்கு குழலில் ஒரு கண் மகிழம்பூ அச்சு போட்டு அதில் மாவை வைத்து துணியில் கை முறுக்குபோல் அளவாக சுற்றி காய்ந்த எண்ணெயில் போட்டு சிவக்க எடுக்கவும்.பொதுவாக முறுக்குகளுக்கு எள் சீரகம் ஓமம் தேவையான மிளகாய்த்தூள், வெண்ணெய், நெய் போன்றவற்றை சேர்ப்பது அவரவர் சாய்ஸ்.