தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு:
* எலும்பில்லாத மட்டன் - 400 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* நெய் -1 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (தட்டியது)
* இஞ்சி - 1/4 இன்ச் (துருவியது)
* தண்ணீர் - சிறிது
பொடிமாஸ் செய்வதற்கு:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 2 சிட்டிகை
* முந்திரி - 10 (உடைத்தது)
* இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
* பூண்டு - 6 பல் (தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4(பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த மட்டன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவி மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் அரைத்த மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி, கிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கி, மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மதுரை மட்டன் பொடிமாஸ் தயார்.



