தேவையானவை:
வேகவைத்த மக்ரோனி - ½ கப்
பிரெட் - 2 ஸ்லைஸ்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ¼ கப்
துருவிய பனீர், பீட்ரூட்,
கேரட் - தலா ¼ கப்
மிளகாய் தூள், கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மைதா மாவு - ½ கப்
பிரெட் தூள் - ¾ கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 300 கிராம்.
செய்முறை:
மைதா மாவை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவு கலவையை வட்டமாகத் தட்டி கட்டர் கொண்டு விரும்பிய வடிவில் நறுக்கி, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து, பிரெட் தூளில் போட்டு புரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையோ சுவை.




