தேவையான பொருட்கள்
சாமை அரிசி - 1 கப்,
நறுக்கிய வாழைப்பூ - 1/2 கப்,
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
பிரியாணி இலை - 1
அன்னாசி பூ - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
நெய்யில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ, சீரகம், பச்சை மிளகாய் தாளிக்கவும். வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி போடவும். அத்துடன் ஊற வைத்த சாமை அரிசியைச் சேர்க்கவும். 2.5 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கவும்.


