தேவையான பொருட்கள்:
* சிவப்பு கெட்டி அவல் 1 கப் -
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* காய்ச்சிய பால் - 4 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* ஏலக்காய் -3 (இடித்தது)
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
*முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், 1 கப் சிவப்பு கெட்டி அவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
*பின் அதே வாணலியில் 1/2 கப் பாசிப்பருப்பை கழுவி சேர்த்து, பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
*பிறகு குக்கரில் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து, அதில் சிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை ஒரு வாணலியில் எடுத்து கொண்டு, அதில் வறுத்த அவலை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி விட வேண்டும்.
*அதன் பின் அதில் 4 கப் காய்ச்சிய பாலை ஊற்றி, 3 ஏலக்காயை இடித்து சேர்த்து கிளறி, மூடி வைத்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
*அவல் வெந்ததும், அதை இறக்கி, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கொதி வர ஆரம்பித்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
*இறுதியாக, சிறிய கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி, திராட்சையை சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் கொட்டி கலந்தால் நெய் மணமணக்கும் சுவையான அவல் பாயாசம் தயார்.
