Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொள்ளு சாதம்

தேவையானவை

கொள்ளு - 150 கிராம்

அரிசி - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

வரமிளகாய் - 3

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

எலுமிச்சை - கால் பழம்

பூண்டு - 10 பல்

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கொள்ளை லேசாக எண்ணெய் இல்லாமல் வறுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் கொள்ளு சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.அதனுடன் ஒரு பங்குக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அரைமணி நேரம் ஊற வைத்த அரிசியை அலசிச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, ஆவி அடங்கியதும், எலுமிச்சம்பழ சாற்றைச் சேர்த்து சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும்.