தேவையான பொருட்கள்
100 கிராம் காராமணி
2 ஸ்பூன்எண்ணெய்
கடுகு
1வெங்காயம்
கருவேப்பிலை
7 பல்பூண்டு
தேங்காய்
2ஸ்பூன்சீரகம்
2காய்ந்த மிளகாய்
உப்பு
செய்முறை
காராமணியை கழுவி பொடியாக வெட்டி வெய்துகொள்ளுங்கள்.தேங்காய், சீரகம்,பூண்டு,காய்ந்த மிளகாய் மிக்ஸி ஜாரில் அறைத்து வெய்யுங்கள்.எண்ணெய் காய்ந்த பின் கடுகு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியபின் காராமணி சேர்த்து வதக்கவும்.10 நிமிடம் வதக்கியபின் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். அரைத்து வைத்த மசாலா சேர்த்து பிரட்டி விடவும்.சுவையான காராமணி பொரியல் ரெடி.


