Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காராமணி தேங்காய்பால் குழம்பு

தேவையான பொருட்கள்

1/2கப் காராமணி

1 கப் சாம்பார் வெங்காயம்

1 தக்காளி

1&1/2டேபிள் ஸ்பூன் தனியாத்தூள்

1 டீஸ்பூன் சீராக தூள்

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் சோம்பு

1கப் தேங்காய் பால்

கறிவேப்பிலை

தேவையான அளவுஉப்பு

செய்முறை

காராமணியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து ஒரு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு மண் பாத்திரத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் காராமணி சேர்த்து மேலும் வேக வைக்கவும்.வேறு ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சோம்பு,வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் சீரகத்தூள்,மிளகாய் தூள், தனியாத்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.பின்னர் எடுத்து மண் பாத்திரத்தை வேகும் காராமணியில் சேர்த்து கலந்து,உப்பு சேர்த்து கலந்து மேலும் பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.பின்னர் தேங்காயை மிக்ஸியில் அரைத்து எடுத்த கெட்டியான பாலை சேர்த்து கலந்து விடவும்.ஐந்து நிமிடங்கள் வெந்ததும் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலந்து,உப்பு சரி பார்த்து, நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் காராமணி குழம்பு தயார்.