Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்டத்திப்பிலி ரசம்

தேவையானவை:

மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்,

புளி - கொட்டைப்பாக்கு அளவு,

உப்பு - திட்டமாக.

வறுத்தரைக்க:

மிளகு, - சீரகம், துவரம்பருப்பு, தனியா - தலா 1 ஸ்பூன்,

மிளகாய் - 2,

கண்டத்திப்பிலி - 4 குச்சி,

அரிசி திப்பிலி - 2.

தாளிக்க:

நெய் - 1 ஸ்பூன்,

கடுகு - 1 ஸ்பூன்,

கறிவேப்பிலை - ஏழெட்டு.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பச்சைவாசனை போனதும் வறுத்து அரைத்த பொடியைப் போட்டு மேலும் தேவையான நீர் சேர்த்து 1 ெகாதிவிட்டு நுரைத்து வந்ததும் இறக்கி விடவும். அதிகம் கொதித்தால் கசந்துவிடும். பிறகு நெய்யில் தாளிக்கவும். கண்டத்திப்பிலி ரசம் மருத்துவ குணம் கொண்டது. உடல் வலி, சளிக்கு நல்லது.