தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 2 கப்
கம்பு - 2 கப்
குதிரைவாலி - 1 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை
கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி அரிசி மூன்றையும் 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும். 3 மணி நேரத்தில் இட்லி ஊற்றலாம்


