Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குதிரைவாலி பிரியாணி

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி - 2 கப்

கேரட், பீன்ஸ் - 250 கிராம்

பீட்ரூட் - 1

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

வரமிளகாய் - 4

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 6 பற்கள்

சோம்பு - ஒரு மேசைக் கரண்டி

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

தயிர் ஆடை - ஒரு மேசைக் கரண்டி (விரும்பி னால்)

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 கப்

செய்முறை :

பெரிய வெங்காயத்தை நீளநீளமாக வும், தக்காளியைப் பொடி யாகவும் நறுக்கிக் கொள்ளவும். காய்கறி களைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைக்க வும்.பின்னர், மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக் கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகிய வற்றைப் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். (நறுக்கி வைத்துள்ள தக்காளி யில் பாதியளவு சேர்த்து அரைத்தால் விழுது நன்றாக இருக்கும்). குதிரை வாலியை நன்றாகக் களைந்து 4 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். (ஒரு கப் குதிரைவாலிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றவும்) பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு பொரிய விட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய வுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அனைத்து காய்கறி களையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பாதியளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும். காய்கறிகள் அரை பதமாக வெந்ததும் குதிரை வாலியைப் போட்டு, மீதமுள்ள தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு வைக்கவும்.கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி போட்டு வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். குக்கரை ஒரு டர்க்கி டவலை நனைத்து பிழிந்து விட்டு சுத்தி வைக்கவும்.5 நிமிடம் கழித்து வெயிட் நீக்கி, வெந்த குதிரைவாலி பிரியாணியை நன்றாக கிளறி விடவும். இதில் மல்லி, புதினா போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறலாம்.