Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொள்ளு வெஜிடபிள் கட்லெட்

தேவையானவை:

வறுத்த கொள்ளு - 200 கிராம்

(6 மணி நேரம் ஊறவைக்கவும்)

கோஸ், கேரட், பீன்ஸ், முள்ளங்கி - தலா 75 கிராம் துருவியது

உருளைக்கிழங்கு-150 கிராம் (வேகவைத்தது)

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 6

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - 200 கிராம்

அரிசி மாவு - 50 கிராம்

செய்முறை:

கொள்ளை இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, பின்பு துருவிய காய் கலவையை சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும். அதனை அரைத்த கொள்ளுடன் கலந்து சிறு சிறு கட்லெட்டுகளாக தட்டி தவாவில் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். எண்ணெயில் பொரிப்பதாக இருந்தால் அரிசி மாவில் பிரட்டி பின்பு பொரித்தால் உடையாமல் மொறுமொறுப்பாக வரும்.