Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மூலிகை ஜூஸ்

தேவையானவை:

துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, தூதுவளை,

புதினா - தலா கைப்பிடி,

இஞ்சி - 1 துண்டு,

மிளகு - 1/2 டீஸ்பூன்,

தனியா - 1/2 டீஸ்பூன்,

எலுமிச்சை பழம் - 1,

உப்பு - தேவைக்கு,

தண்ணீர் - 2 டம்ளர்.

செய்முறை:

மேற்கூறிய மூலிகைககளை நன்கு அலசி அத்துடன் மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து விழுதாய் அரைத்து 2 டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை சேர்த்து இளம் சூடாய் பருகவும். இது உடம்பு வலி, தொண்டை கரகரப்பு, சளி நீக்கும். குளிர்காலத்தில் அடிக்கடி பருகலாம்.