Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பச்சை பட்டாணி, கோவைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி- ஒரு கப்

கோவைக்காய் அரிந்தது- ஒன்னரை கப்

பீன்ஸ்- 10 எண்ணிக்கை அரிந்தது

தேங்காய்த் துருவல்- ரெண்டு டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் -ஒன்று அரிந்தது

கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் போன்றவை- தாளிக்கத் தேவையான அளவு

உப்பு- ருசிக்கு ஏற்ப

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் சாம்பார்பொடி சேர்த்து கிளறி, அரிந்து வைத்த காய்கறிகளை ஒன்றாகப்போட்டு கிளறிவிட்டு தேவையான அளவு உப்பு போட்டு, அரைத்த தேங்காய் துருவலை அதில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்.வித்தியாசமான ருசியில் மிகவும் எளிமையான ரெசிபி இது. சாப்பிட ருசியாக இருக்கும். வத்தல் குழம்பு, கறிவேப்பிலை குழம்பு, பூண்டு வெங்காய குழம்பு, இவை எல்லாவற்றையும் ஒன்றாக செய்த குழம்பு என்று எதற்கு தொட்டுக்கொண்டாலும் நல்ல மேட்ச் ஆக இருக்கும். கோவக்காய் உடன் பச்சை பட்டாணி சேர்வதால் அனைவரும் விரும்பி உண்பர். சீசனில் செய்து அசத்துங்க.