தேவையானவை
பச்சைப்பயறு - 100 கிராம்
அரிசி - 1கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
எலுமிச்சை - கால் பழம்
பூண்டு - 10 பல்
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், பச்சைப்பயறு சேர்த்து வதக்கவும். அதனுடன் தண்ணீர் ஒரு பங்குக்கு 3 பங்கு சேர்க்கவும். அதனுடன் அரைமணி நேரம் ஊற வைத்து அலசிய அரிசியைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவைத்து வேகவிடவும்.


