Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பச்சை மிளகாய் பச்சடி

தேவையானவை:

பச்சை மிளகாய் - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

புளி - எலுமிச்சை அளவு

வெல்லம் (பொடித்தது) - 4 மேைஜக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி.

தாளிக்க:

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

கடுகு - 1 மேஜைக்கரண்டி

உளுந்து- - ½ மேஜைக்கரண்டி.

செய்முறை:

பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர், மல்லிப்பொடி, மஞ்சள் தூள், வெல்ல தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். காரம் அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்ல தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.