தேவையானவை:
தேங்காய் துருவல் - 1 கப்,
கடலைப்பருப்பு - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - ¼ டீஸ்பூன்.
செய்முறை:
கடலைப்பருப்பை சுத்தம் செய்து, வேகவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு வைக்கவும். தேங்காய் துருவல், கடலைப்பருப்பு விழுது, ஏலக்காய் தூள் ஆகியவற்றை பாகுடன் சிறு தீயில் கிளறவும். நெய் விட்டு அடிப்பிடிக்காமல் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி மிதமான சூடு இருக்கும்போதே துண்டுகள் போடவும்.

