Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுனி அரிசி அல்வா

தேவையானவை:

கவுனி அரிசி - 1 கப்,

வெல்லம் பொடித்தது - 1 கப்,

ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல், நெய், முந்திரி - தலா ½ கப்.

செய்முறை:

கவுனி அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து, ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பிறகு குக்கரில் ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு 3 (அ) 4 விசில் விடவும். ஆறியதும் எடுத்து உதிர்க்கவும். வாணலியில் நெய் விட்டு மற்ற எல்லாப் பொருட்களையும் ேசர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் இறக்கவும். சுவை மிக்க சத்தான கவுனி அரிசி அல்வா தயார்.