Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொத்தவரங்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

200கிராம் கொத்தவரை காய்

50கிராம் வெங்காயம்

1டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள்

1/2டீஸ் ஸ்பூன் மஞ்சள் தூள்

1/4கப் தேங்காய் துருவல்

உப்பு

தாளிக்க

எண்ணை

கடலை பருப்பு

உளுந்து பருப்பு

கறிவேப்பிலை

செய்முறை:

கொத்தவரை காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.சூடு செய்த வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்ந்து வதக்கவும்.பின்பு வெட்டி வைத்துள்ள காயை சேர்த்து, அதில் மஞ்சள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைத்து வேகவிடவும்.ஐந்து நிமிடம் போதுமானது. இப்போது தேங்காய் துருவல் சேர்ந்து நன்கு கலந்து உப்பு சரி பார்த்து இறக்கவும்.சுவையான, சத்தான கொத்தவரை பொரியல் தயார்.