தேவையான பொருட்கள்
கோவக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 6
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 கப்
புளி - கோலி குண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு குழி கரண்டி
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 (குண்டு)
கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய கோவக்காய் மற்றும் புளி சேர்த்து அனலை குறைத்து சிறிது உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். அடுப்பை அணைத்து அதே சூட்டில் தேங்காய்த் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும். ஆறியதும் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான கோவக்காய் கார சட்னி தயார்.


