Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அல்ஸி லட்டு

தேவையான பொருட்கள்:

அல்ஸி (Flax Seeds) 1 கப்

முழு கோதுமை மாவு 1 கப்

பொடித்த வெல்லம் 1 கப்

நெய் ½ கப்

உடைத்து நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, வால்நட் கலவை ¼ கப்

ஏலக்காய் பவுடர் ½ டீஸ்பூன்

செய்முறை:

அல்ஸி விதைகளை வாணலியில் போட்டு மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு பொடியாகிக் கொள்ளவும். பின் வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை போட்டு கோல்டன் கலர் வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும். பிறகு அதோடு அல்ஸி பவுடரை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கலந்து விடவும். அத்துடன் நட்ஸ் வகைகளை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றுசேர நன்கு கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சிறிது ஆறியதும் வெல்லப் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். பாத்திரத்தின் சூட்டிலேயே வெல்லம் உருகி மற்ற பொருட்களுடன் ஒன்றாக கலந்துவிடும். அதன் மீது ஏலப் பொடியை தூவவும். கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு தேவையான சைஸ் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.உருண்டை உதிர்வது போலிருந்தால் கொஞ்சம் நெய்யை உருக்கி மாவுடன் கலந்தால் சுலபமா உருண்டைகளைப் பிடித்து விடலாம். லட்டுகளை நன்கு ஆறவிட்டு காற்றுப் புகாத கண்ணாடி ஜாரில் போட்டு இறுக மூடிவைத்தால் இரண்டு வாரம் வரை கெடாது.