தேவையானவை:
கெட்டி அவல் - 200 கிராம்
ஆரஞ்சு பழச்சாறு - 200 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
சுண்ட காய்ச்சிய பால் - 1 லிட்டர்
கிரீம் - 1 கப்
சர்க்கரை - 50 கிராம்
ஜி.எம்.எஸ் - 2 டீஸ்பூன்
ஜெலடீன் - 2 டீஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்டெபிலைஸர் - 2 டீஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - 100 கிராம்.
செய்முறை:
அவலை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து, நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து ஊறவைத்து, கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். பாலை சுண்டக்காய்ச்சி ஆற வைத்து, சர்க்கரை சேர்த்து கலக்கவும். ஜி.எம்.எஸ்.ஐ வெதுவெதுப்பான பாலில் நன்றாக கரைய விடவும். பிறகு ஜெலடீனை அரை கப் கொதிக்கும் நீரில் போட்டு கரைக்கவும். ஒரு ஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைஸரை கலந்து வைக்கவும். தயார் செய்திருக்கும் சர்க்கரை கலந்த பாலில் ஜி.எம்.எஸ், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைஸர், ஜெலடின், கிரீம், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, டூட்டி ஃப்ரூட்டி மற்றும் அவல் ஆகியவற்றை நன்கு கலந்து, ஐஸ் கிரீம் கப்புகளில் விட்டு, ஃப்ரீசரில் வைக்கவும். சுவையான அவல் ஆரஞ்சு பழ ஐஸ்கிரீம் ரெடி.


