தேவையான பொருட்கள்.
முட்டை- 3
பனீர்- 100 கிராம்.
பச்சை மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு.
பேக்கிங் சோடா- 1 சிட்டிகை.
தேங்காய் துருவல்- 1 கப்.
முந்திரி- தேவையான அளவு.
செய்முறை
முதலில் பவுலில் 3 முட்டை, 1 கப் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு, பேக்கிங் சோடா 1 சிட்டிகை, பனீர் 100 கிராம் சேர்த்து நன்றாக மசித்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு வந்ததும் இட்லி பாத்திரத்தில் முந்திரி 1 வைத்து அதன் மீது செய்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் அல்டிமேட்டான சுவையில் பனீர் இட்லி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை மறக்காமல் வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.


