தேவையான பொருட்கள்:
இறால் மசாலாவிற்கு
இறால் 250 கிராம்
மைதா 3 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் ½ டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
முட்டை 1
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.
டைனமைட் சாஸ் தயாரிக்க
மயோனைஸ் 4 டேபிள்ஸ்பூன்
சில்லி சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
தேன் 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு 1 டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது ½ டீஸ்பூன்
எள் சிறிதளவு.
செய்முறை:
இறாலை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் ஃப்ளோர், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு, முட்டை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அதில் இறாலை சேர்த்து நன்றாக பிரட்டவும். எண்ணெயை சூடாக்கி, இறாலை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் மயோனைஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், தேன், எலுமிச்சைச் சாறு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து Dynamite Sauce தயாரிக்கவும்.
பொரித்த இறாலை சாஸில் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
மேலே எள் தூவி பரிமாறவும். சுவையான டைனமைட் இறால் தயார்.
மருத்துவ பயன்கள்
இறால் உயர்தர புரதம் கொண்டது; தசை வளர்ச்சிக்கும் உடல் திசுக்களைப் பராமரிக்கவும் உதவும்.
வைட்டமின் பி12 நரம்பு மண்டலம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கத்திற்கு முக்கியமானது.
செலினியம் உடலின் ஆன்டி - ஆக்ஸிடென்ட் பாதுகாப்பிற்கு உதவுகிறது.
இறாலில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
இறால் பொதுவாக குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவாகும்.
- ஹேமலதா வாசுதேவன்

