தேவையானவை
தோலுரித்த பாதாம்
வால்நட், பிஸ்தா, முந்திரி (பொடியாக நறுக்கியது) - 1கப்,
காய்ந்த அத்திப்பழம் - 2
பேரீச்சம்பழம், திராட்சை - 15
நெய் - கால் கப்
சர்க்கரைப் பொடி - தேவைக்கேற்ப
எசென்ஸ் அல்லது ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை.
செய்முறை:
வால்நட், பாதாம், முந்திரியை பொடித்து கொண்டு அதனுடன் பேரீச்சம்பழம், உலர்திராட்சை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பின் சர்க்கரைப் பொடி, வாசனைத்தூள் சேர்த்து நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும். விருப்பமெனில் உலர் தேங்காய்த் துருவலில் உருண்டையை ரோல் பண்ணி செர்ரி வைத்துக் கொடுக்க, சுவையோடு சத்தும் சேரும்.


