தேவையானவை
முருங்கைக்கீரை - 1 கப்
வேகவைத்த துவரம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க
தனியா - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி
பெருங்காயம் - சிறு துண்டு
கொம்பு மஞ்சள் - சிறு துண்டு.
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை:
முருங்கைக்கீரையை உப்பு போட்டு வேக வைக்கவும். அதில் வறுத்து அரைத்த மசாலா, வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி தாளிக்கவும். சத்தான
முருங்கைக்கீரை சாம்பார் தயார்.


