Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உலர் பழ அடை

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 1 கப்

அத்திப்பழம் - 4 துண்டுகள்

பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு (ஊறவைத்து தோலுரித்தது)

பிஸ்தா, செர்ரிப்பழம், முந்திரி - தலா 10

காய்ந்த திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

ஆல்பக்கோடா பழம் - 6

நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, ஊறிய பின் உப்பு சேர்த்து அரிசியை கொர கொரப்பாக அரைக்கவும். பிஸ்தா, முந்திரி, பாதாம் இவற்றை விழுதாக அரைக்கவும். அத்திப்பழம், பேரீச்சை, செர்ரிப்பழம், ஆல்பக்கோடா, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து அத்துடன் அரைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா விழுதையும் சேர்த்துக் கலந்து கல்லில் சிறு அடைகளாக தட்டி, இருபுறமும் நெய்விட்டு வெந்ததும் எடுக்கவும்.