தேவையான பொருட்கள்
மாவிற்கு:
டிராகன் ஃப்ரூட் ½ கப்
அரிசி மாவு 1 கப்
சர்க்கரை 12 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் ½ கப்
ஏலக்காய் தூள் சிறிதளவு.
பூரணத்திற்கு:
தேங்காய் துருவல் ½ கப்
வெல்லம் ¼ கப்
ஏலக்காய் சிறிதளவு
எள் 1 டீஸ்பூன்
செய்முறை:
டிராகன் ஃப்ரூட்-ஐ அரைத்து வடிகட்டி ஜூஸ் பிழிந்துக் கொள்ளவும். அரிசி மாவுடன் டிராகன் ஃப்ரூட் ஜூஸ் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும். தேங்காய், வெல்லம், எள், ஏலக்காய் சேர்த்து பூரணமாக கலந்து வைக்கவும். மாவை சிறிய உருண்டையாக செய்து நடுவில் பூரணம் வைத்து மோமோஸ் வடிவில் பிடிக்கவும். பிறகு 1012 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். சுவையான டிராகன் ஃப்ரூட் மோமோஸ் தயார்.
டிராகன் ஃப்ரூட்டின் நன்மைகள்
டிராகன் ஃப்ரூட் -ல் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடென்டஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளன.
தேங்காய் மற்றும் எள் சில ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கனிமச்சத்துக்களை வழங்குகின்றன.
- ஹேமலதா வாசுதேவன்



