Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாவளி இனிப்பு ஸக்கார் பரே

தேவையான பொருட்கள்:

ஸக்கார் பரேக்கு தேவையானவை

முழு கோதுமை மாவு – 2 கப்

நெய் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – தேவைப்படும் அளவு

ரவை – கால் கப்

எண்ணைய் – பொறித்தெடுக்கத் தேவையான அளவு

சர்க்கரைப் பாகுக்கு தேவையானவை

தூளாக்கிய சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – அரை கப்

குங்குமப்பூ – சில இதழ்கள் (நீங்கள் விரும்பினால்)

செயமுறை

ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்து அதனுடன் ரவை, நெய் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். இந்த நான்கு பொருட்களின் கலவையை நன்கு கலக்கவும்.இப்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். மாவு மென்மையாக மற்றும் திரண்டு வரும் வரை அதை நன்கு பிசையவும்.மாவை இரண்டு சம பகுதிகளாக பிரித்து அதை ஒரு சுத்தமான பருத்தி துணி கொண்டு மூடி வைக்கவும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, மாவை பந்து போல் உருட்டி எடுத்து அதை சப்பாத்திக் கல்லில் வைத்து ஒரு தடித்த பராத்தா பதத்திற்கு தேய்க்கவும்.இப்போது, தேய்த்த மாவை கிடை மட்டமாக மற்றும் செங்குத்தாக வைர வடிவில் வெட்டி துண்டுகளாக மாற்றவும்.ஒரு கடாயில் பொறித்து எடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதைச் சூடாக்கவும்.எண்ணெய் சூடான பின்னர் அதில் வெட்டி வைத்த துண்டுகளைச் சேர்த்து துண்டுகள் பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்கவும். துண்டுகள் பொறியும் பொழுது தீயை மிதமாக மாற்றவும். கடாயில் அனைத்துத் துண்டங் களையும் போட வேண்டாம். கடாயில் துண்டங்கள் பொறிவதற்கு தேவையான இடைவெளி இருப்பது மிகவும் அவசியம். ஸ்க்கார் பரே பொன்னிறமாக வரும் வரை பொறிய விடவும். அதன் பிறகு ஸ்க்கார் பரேவை கடாயில் இருந்து எடுத்து அதிகம் உள்ள எண்ணெயை வடிய விடவும்.

சர்க்கரை பாகு தயாரிக்க :

ஒரு கடாயில் சர்க்கரையை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்க்கவும். நடுத்தர வெப்ப நிலையில் தீச் சுடரை குறைந்து, சக்கரையானது தண்ணீரில் நன்கு கரையும் வரை கலக்கவும்.கொப்புளம் மற்றும் ஒட்டும் பதம் வரும் வரை கலவையை கலக்கவும். அதன் பின்னர் பாகில் குங்குமப்பூ சேர்க்கவும்.பாகை கையில் எடுத்து பார்க்கும் பொழுது இரண்டு அல்லது மூன்று கம்பிகள் வரும் வரை தொடர்ந்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.இறுதியாக, ஸக்கார் பரேயின் மீது பாகை கொட்டி அதை பரவ விடவும்.ஸக்கார் பரே குளிரும் வரை அப்படியே விட்டு விடவும். இப்பொழுது உங்களின் ஸக்கார் பரே பறிமார தயாராக உள்ளது.