Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தீபாவளி லேகியம்

தேவையானவை:

சுக்கு - ஒரு துண்டு,

மிளகு - 25 கிராம்,

கண்டந்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன்,

அரிசித்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன்,

நல்லெண்ணெய் - 25 கிராம்,

தனியா - 50 கிராம்,

சீரகம் - 25 கிராம்,

ஓமம் - 25 கிராம்,

பனை வெல்லம் - 500 கிராம்,

அதிமதுரம் - ஒரு துண்டு,

சித்தரத்தை - ஒரு துண்டு,

நெய் - 50 கிராம்,

தேன் - 2 டேபிள்ஸ்பூன்,

விரலி மஞ்சள் - ஒரு துண்டு

செய்முறை:

எண்ணெய், நெய், தேன் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெயிலில் நன்றாகக் காய வைக்கவும். அதிமதுரம், சுக்கு, மஞ்சள், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி இவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் மல்லி (தனியா), மிளகு, சீரகம், ஓமம் இவற்றை வறுத்து நசுக்கியவற்றையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பனைவெல்லத்தை நசுக்கிப் போட்டு ஒரு கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி, வெல்லம் பாகாகும் வரை கொதிக்க விடவும். பிறகு, நல்லெண்ணெய் ஊற்றி, பொடித்து வைத்திருக்கும் பொடியைத் தூவி இடையிடையே நெய் விட்டுக் கிளறி இது ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அடுப்பை சிம்மிலேயே வைக்கவும். கைகளால் உருட்டும் பதம் வந்ததும் இறக்கி தேன் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விட்டால் தீபாவளி லேகியம் தயார்.