Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கறிவேப்பிலை சாதம்

தேவையானவை

சாதம் - 2 கப்

கறிவேப்பிலை - ஒரு கப்

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

வர மிளகாய் - 3

பெருங்காயம் - 1 சிட்டிகை

முந்திரி - 5

எலுமிச்சை - கால் பழம்

நெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை முறுகலாக வறுத்து, மைய பொடித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து வடித்த சாதத்துடன் கிளறவும்.